பள்ளி ஆசிரியையிடம் 5 சவரன் வழிப்பறி: தொடர் திருட்டால் திருப்பூரில் பீதி
வெள்ளக்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பள்ளி ஆசிரியையிடமிருந்து 5 பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.


வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பள்ளி ஆசிரியையிடமிருந்து 5 பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
முத்தூர் சாலையிலுள்ள கொங்கு நகரைச் சேர்ந்தவர் வீரக்குமார். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகக் காங்கயம் பணிமனை அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வளர்மதி (46). இவர் வெள்ளக்கோவில் ஒன்றியம் ஆலாம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார்.
இவர் வீட்டிலிருந்து 10 கி.மீ. தூரமுள்ள பள்ளிக்கூடத்துக்குத் தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று, வருவது வழக்கமாகும். இவ்வாறு சம்பவத்தன்று காலை சென்று கொண்டிருந்த போது, முத்தூர் சாலை வாய்க்கால்மேட்டுப்புதூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினைப் பறித்துச் சென்று விட்டனர்.
அப்போது கீழே விழுந்ததில் காயமடைந்த ஆசிரியை, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறுகிய காலத்தில் இவ்வாறு மூன்று ஆசிரியைகளிடம் வழிப்பறி நடந்துள்ளது. இது போன்ற தொடர் திருட்டுச் சம்பவங்கள் ஆசிரியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...